Sunday, December 28, 2008

பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை - அமீர்

இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்

ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்

குமுதம் 31.12.2008

No comments: