Sunday, December 28, 2008

பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை - அமீர்

இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்

ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்

குமுதம் 31.12.2008

Monday, December 15, 2008

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள்.என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா? ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை!பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம்.இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும்.ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள்.ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும்.பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது.ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா?இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது.காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம். பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான்.பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது.சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான். இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை.தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை.பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள்.இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும்.பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும்.தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது.அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?.

Thursday, December 11, 2008

டேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் !!!

http://vettrifm.homestead.com/index.html

இதை இன்று எனது காலை நிகழ்ச்சியான் 'விடியலில்' சொல்லி, நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும் போது நண்பர் இர்ஷாத் ஒரு தகவல் ஒன்று அனுப்பினார்..
இலங்கையின் மாத்தறைப் பகுதியில் ஒரு பதின்மூன்று வயது சிறுமி குழந்தை ஒன்றுக்கு தாயாகி இருப்பதாக அவர் சொன்னார்.
அடப் பாவிகளா (விவேக் ஸ்டைலில் வாசிக்கவும்) அங்கே அவன் அமெரிக்காவில் சொல்லி மட்டும் தான் குடுத்தான்.. இங்கே செயலிலேயே காடீடிங்களே.. .. (நன்றி இர்ஷாத்)

Friday, November 14, 2008

கடந்த செப்டம்பர் 29-ல் மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆறு பேர் உடல் சிதறி இறந்தார்கள். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி அது. அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்த விசாரணையில் இப்போது அணுகுண்டே வெடித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு அக்கிரமச் செயலைச் செய்ததற்காக ஸ்ரீகாந்த் புரோகித் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வகிப்பவர். அதேபோல் இந்தூரைச் சேர்ந்த பிரக்யா சிங் தாகூரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறது போலீஸ். இவர் இந்து மதப் பெண் துறவி. இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களாக மேலும் சில இந்திய ராணுவ அதிகாரிகளும், இந்துமத அமைப்பினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட, தேசம் இப்போது அதிர்ச்சியின் விளிம்பில். மதிப்பிற்குரிய ராணுவத்தின் நடுநிலைத் தன்மையையும் இந்துமத அமைப்புகளின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும் மாலேகான் குண்டுவெடிப்பு ஒரே சமயத்தில் காலியாக்கியிருக்கிறது.
``மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏதோ அபூர்வமான விதிவிலக்கு மாதிரி பேசுகிறார்கள். உண்மையில் அது பெரிய நெட்வொர்க்கின் ஒரு சின்ன பகுதிதான். திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு, அந்தப் பழியை முஸ்லிம்கள் மேல் போடு கிற வேலையை இந்து அமைப்புகள் இதற்கு முன்பும் செய்துள்ளன.'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ். ``இதே மகாராஷ்டிராவிலுள்ள நந்தெத் பகுதியில் 2006லும் 2007-ம் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. பஜ்ரங்தள் அமைப்பினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடித்தது. பிரபல மனித உரிமை ஆர்வலரும் நீதிபதியுமான கோஸ்லே பாட்டில் `இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் இந்து பயங்கரவாதத்துக்கான அறிகுறி' என அப்போதே எச்சரித்தார். தமிழகத்தில் கூட இந்து மத அமைப்பினரின் சதி அரங்கேறியிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களேதான் சம்பந்தப்பட்டிருந்தார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகப் பிரசாரம் செய்கிற போக்கு இனியாவது இந்துமத அமைப்பினரால் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் மார்க்ஸ்.
எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், போலீஸ் கண்களை மூடிக்கொண்டு முஸ்லிம்களை கைது செய்யும் அணுகுமுறையையும் மாலேகான் குண்டுவெடிப்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
``இதுவரை குண்டு வெடிப்புகளில் தொடர்புள்ளவர்களாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்ற சந்தேகத்தை மாலேகான் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 2001-ல் நாடாளுமன்றத் தாக்குதல் முதல் சமீபத்தில் நடந்த மீரட் குண்டுவெடிப்பு வரை முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்ட அனைத்து பயங்கரவாதச் சம்பவங்களையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஜவாஹிருல்லா.
இது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பினர் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவி உள்ளனர் என்றும் உளவுத்துறை தகவல்கள் சொல்லுகின்றன.
``ராணுவம் உள்ளிட்ட பல முக்கியத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்பினரின் ஊடுருவல் இப்போது வெட்டவெளிச்ச மாகியுள்ளது. இந்த ஆபத்தான போக்குக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று நடுநிலையாளர்கள் வைக்கும் கோரிக்கையை செவிமடுத்தால், இந்தியாவில் குண்டுவெடிப்புச் சப்தங்கள் குறையும்..
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை!
இந்த செய்திகளுக்கெல்லாம் ஆதாரமே இல்லை என்று ஆவேசமாய் மறுக்கிறார் இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன். ``இந்து மதத் தலைவர் களுக்கும் இந்து அமைப்புகளுக்கும் பயங்கரவாத சாயம் பூசுவது தவறு. இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்தியன் முஜாகிதீன், சிமி உள்ளிட்ட அமைப்புகளைப் போல, `அபிநவ் பாரத்'தையும் தடை செய்ய வைப்பதற்கான திட்டமோ என்ற சந்தேகத்தை இது போன்ற அவசரக் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்துகின்றன. விரைவில் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் இந்து மத அமைப்புகளைத் தீவிரவாத இயக்கங்களாக மக்களிடம் முன்னிறுத்தும் முயற்சியாகக்கூட இந்தக் கைது நடவடிக்கையும் அதையொட்டிய அவதூறுகளும் இருக்கக்கூடும். இந்து மதத்துக்கு எப்போதும் வன்முறையில் நம்பிக்கை கிடையாது. மற்ற மதத்தினரை வெறுக்கும்படி வலியுறுத்துகிற போதனைகள் எதுவும் இந்து மத நூல்களில் இல்லை'' என்கிறார் இராம.கோபாலன்.
அபிநவ் பாரத்இந்த அமைப்பு 2006-ல் துவக்கப்பட்டது என்கிறார்கள். இதைத் துவக்கியவர் ஒரு வரலாற்றாசிரியர் என்றும் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பாகத்தான் இதை நிறுவினார் என்றும்; ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வெளியேறிய சில ராணுவ அதிகாரிகள் இந்த அமைப்பை கையில் எடுத்த பிறகு கொள்கை மாறிவிட்டது என்றும் சொல்கிறார்கள். தீவிரவாதத்துக்குத் தீர்வு தீவிரவாதம்தான் என்பது இவர்கள் கொள்கை. இந்திய விடுதலைப் போராட்டத்துக்காக 1905&ல் சாவர்க்கரால் துவக் கப்பட்ட இயக்கம் அது என்று சிலர் சொல்வது தவறு என்கிறார்கள் வரலாற்று ஆசிரி யர்கள். சாவர்க்கரின் அபினவ் பாரத் 1952லேயே கலைக்கப்பட்டுவிட்டதாம்.

Thursday, October 30, 2008

கறுப்பு ஒக்டோபர்

என்னை கேட்டால் ஜூலை கலவரத்தைவிட அக்டோபர் இன சுத்திகரிப்பு தான் இலங்கையில் நடந்த பெரிய அட்டூழியம் என்பேன் .

காரணம்

1) ஜூலை இல் தமிழ் மக்கட்கு சிங்களவர் உதவினர். ஆனால் அக்டோபர் இல் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு உதவவில்லை.

2) ஜூலை கலவரத்தை வைத்து தமிழ் மக்கள் பிழைத்து கொண்டார்கள். இல்லாவிட்டால் ஐரோப்பா கனவுகள் சாத்தியப்பட்டிருக்குமா? (அவர்கள்தான் இப்போதும் புலிகளை யுத்தத்துக்கு தூண்டிகொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. இன்று கூட வெளிநாட்டு கனவுகளுடந்தான் சுய காணாமல் போதல்கள் அரங்கேறுகின்றன) .

3)கொழும்பில் தொடர்ந்தேச்சயாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பகுதிகளை விட அதிக சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை வேரோடு பிடுங்கி எறி ந்திருக்கிறார்கள். இன்று வரை அவல வாழ்கை அவர்களை துரத்துகிறது.

இன்று ஊர்வலம் போகும் தமிழ் நாடு அன்று துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? இது போதாதா முஸ்லிம்கள் வேறாக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்?

முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது அன்று அஷ்ரப் சொன்னது தான். தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்! நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

நண்பர்களின் கருத்துகட்கு நன்றி!"சிங்கள ராணுவ உதவியோடு அவர்களை வெளியேற்றிவிட்டு மீளச் செல்லலாமே.." ஏன் அதை முஸ்லீம் இனவாதம் என்று பத்திரிகைகளில் தலைப்பிட்டு முஸ்லீம் விரோதத்தை இன்னும் கூர்மை படுத்தவா? மீண்டும் வன்முறைகளையும் இடப்பெயர்வுகளையும் எதிர்கொள்ள பிச்சைக்காரர்களாகவேனும் நிம்மதியாக வாழும் அப்பாவிகளை பகடை காய்களாக்கவா? யாழ்ப்பாண மீள்குடியேற்றத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதற்கு வெள்ளவத்தையில் நிரம்பி வழியும் தமிழர்களே சமகால சான்று. அத்துடன் மிக அண்மைய முதூர் வெளியேற்றமும், வெளியேற்றத்தை மறைமுகமாக நிர்பந்திதமையும் (குரங்கு பாஞ்சான் உட்பட) யாழ் மீள்குடியேற்றம் இப்போது சாத்தியமானதல்ல என்று கோடிட்டு காட்டுகின்றது. மற்றும் அது தொடர்பான கருத்தாடல்கள் இரு சமூக பிரபலங்களுடன் ஏராளமாய் "எரிமலை"யில் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் முஸ்லிம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேறல் தங்களுக்கு உவப்புக்குரியதில்லை என்று பெரும்பாலான தமிழ் பிரபலங்கள் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். (அவை தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போதும் என் கணனியில் பாதி இடத்தை பிடித்திருக்கின்றன) எல்லாளன் சங்கிலியன் படைகளின் மிரட்டல்களை அறிந்துகொள்ள அக்கால முஸ்லீம் பத்திரிகைகளை பாருங்கள். எனென்றால் தமிழ் ஊடகங்கள் புலிகளுக்கு கெட்ட பெயர் உண்டாகும் எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை என்பது நீங்கள் அறியாததொன்றல்ல. (ஏன் சிங்கள இனவாதம் முஸ்லிம்களை தாக்கும் போது கூட இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்றே செய்தி வெளியிடுகின்றன!)(முஸ்லீம் சிங்கள பிரச்சினைகள் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட போதெல்லாம் சிங்கள இனவாதிகளை காத்துதவி புரிந்ததெல்லாம் அக்கால தமிழ் தலைமைகள் என்பதும் இன்னும் மறக்கமுடியாத வரலாற்று பாடம். )"விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்..." யாழ்ப்பாண மக்கள் அறிவு கொழுந்துகள் என்ற நம்பிக்கையில் மரண அடி கொடுத்த வாக்கு மூலம் இது. சாந்தி ஆசைக்காக நான் இங்கு கருத்தாடவில்லை. இரு தசாப்தத்தை நெருங்கிவிட்ட யாழ் முஸ்லிகளின் பிரச்சினையில் இன்னும் தமிழ் மக்களின் பார்வை அன்றிருந்ததை விட பெரிதாக மாறவில்லை என்ற உண்மையின் வலிக்கிறது . அவ்வளவே. இக்கால பகுதியில் எல்லா வெகுஜன ஊடகங்களிலும் சொல்லப்பட்ட முஸ்லிம்களின் நியாயம் தமிழ் மக்கள் காதுகளில் கூட போட்டுக்கொள்ளவில்லை என்று புரிகிறது அல்லவா? விடிய விடிய ராமாயணம்...அத்துடன் அதைவிட பழைய ஜூலை இன்றும் பேசப்படும்போது அக்டோபர் மறக்கப்படும் என்று எதிர் பார்ப்பது எங்ஙனம் இயலும்? விடுதலை இயக்கங்களில் முக்கிய புள்ளிகளாக இருந்த முஸ்லீம் கள் பிற இயக்கத்தவர்களால் மட்டுமல்ல அதே இயக்கத்தவர்களால் கொல்லப்பட்ட உண்மை மறக்கடிக்க பட்டுவிட்டதா? இதேவேளை முஸ்லிம்களின் வலியை புரிந்த எல்லா தமிழர்களுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும். முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது "தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்!" நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

Tuesday, October 28, 2008

இந்த கருத்துக்களுக்கு யாரவது அறிவார்ந்த பதில் அளித்தால் நல்லது. அறிவுமதி சொன்னது எல்லாம் அறிவார்ந்த பதில் ஆகுமா? கேள்விக்குத்தான் பதில்! (லியோனி பட்டிமன்றம் அரட்டை அரங்கம் பார்பவர்கட்குதான் புரியவில்லை. தமிழ் சங்க விவாத மேடை கண்டவர்கட்குமா புரியவில்லை?) கருத்தை திருப்பி சொல்வது பதில் ஆகுமா?

குமுதத்தில் ஞானி சொன்னது

ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து, மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் ஷேவ் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு, ஏ.சி. காரில்தான் வந்து இறங்குகிறார்கள். மேற்கே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் உலவும் ஏடுகளில், பூசம், கார்த்திகை முதலிய சைவச் சடங்குகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், தீபாவளிக்கு புது டிஸைன் நகை, பட்டு வகைகள், வாஸ்து, ஜோதிட விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளில் குண்டு வீச்சு செய்திகளை விட அதிகமாக `டாக்சி டாக்சி'தான் ஒலிக்கிறது. எட்டு மணி நேரம் கியூவில் நின்று 15 ஆயிரம் இலங்கைப் பணம் கொடுத்து ஒரு தமிழ்ப்படத்தை அண்மையில் பார்த்தேன் என்று ஒரு இலங்கைத் தமிழர் வலைப்பூவில் எழுதியதைப் படிக்கும்போது, குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது எழும் வேதனைக்கு நிகரான வேதனை எனக்கு உண்டாகிறது. அவர்களுக்காக அனுதாபப்படும் யாரும் எங்கேயும் தங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொள்வதே இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலையில் மேலும் மேலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைப்பது அர்த்தமற்றது. சிந்திக்க வைப்பதுதான் தேவை. பகுத்தறிவு ஒன்றுதான் தீர்வு.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய காந்தி, ஒருபோதும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பை நம் மனங்களில் விதைக்கவில்லை. அதனால்தான் இன்று ஆங்கிலத்தைப் பயன்படுத்தி நம்மவர்களால் உலகம் முழுதும் வெற்றி அடைய முடிகிறது. வெறுமே உணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன், தமிழச்சிகள் அங்கே கற்பழிக்கப்படுகிறார்களே என்று இங்கே பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய நடிகனெல்லாம், மேடையில் குமுறுவதைக் கேட்க அருவருப்பாக இருக்கிறது..அனுதாபக் குரல்களை எழுப்பியவர்கள் எல்லாரும் குறைந்தபட்சம் ஒருசில மணி நேரங்களில், அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் அல்லது மாதங்களில் அவரவர் சுகதுக்கங்களுக்குப் போய்விடுவார்கள்

ஐயோ அண்ணா உனக்கு என்ன ஆச்சி? நீங்களும் கிளம்பிடீங்களா?தமிழ் நாட்டு அரசியலை நீங்கள் உன்னிப்பாக ஏக்கதுடன் பார்ப்பதிலிருந்து தெரியவில்லையா உங்களது பாதி கேள்விகளுக்கு பதில்? இந்த பிதற்றும், சுத்தி சுத்தி ஒரே செய்தியை மட்டும் சொல்லும் தமிழ் ஊடகங்களை நல்வழி படுத்தினால் மீதி பிரச்சினையும் தீரும்.

இர்ஷாத்