Thursday, October 30, 2008

கறுப்பு ஒக்டோபர்

என்னை கேட்டால் ஜூலை கலவரத்தைவிட அக்டோபர் இன சுத்திகரிப்பு தான் இலங்கையில் நடந்த பெரிய அட்டூழியம் என்பேன் .

காரணம்

1) ஜூலை இல் தமிழ் மக்கட்கு சிங்களவர் உதவினர். ஆனால் அக்டோபர் இல் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு உதவவில்லை.

2) ஜூலை கலவரத்தை வைத்து தமிழ் மக்கள் பிழைத்து கொண்டார்கள். இல்லாவிட்டால் ஐரோப்பா கனவுகள் சாத்தியப்பட்டிருக்குமா? (அவர்கள்தான் இப்போதும் புலிகளை யுத்தத்துக்கு தூண்டிகொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. இன்று கூட வெளிநாட்டு கனவுகளுடந்தான் சுய காணாமல் போதல்கள் அரங்கேறுகின்றன) .

3)கொழும்பில் தொடர்ந்தேச்சயாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பகுதிகளை விட அதிக சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை வேரோடு பிடுங்கி எறி ந்திருக்கிறார்கள். இன்று வரை அவல வாழ்கை அவர்களை துரத்துகிறது.

இன்று ஊர்வலம் போகும் தமிழ் நாடு அன்று துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? இது போதாதா முஸ்லிம்கள் வேறாக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்?

முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது அன்று அஷ்ரப் சொன்னது தான். தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்! நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

நண்பர்களின் கருத்துகட்கு நன்றி!"சிங்கள ராணுவ உதவியோடு அவர்களை வெளியேற்றிவிட்டு மீளச் செல்லலாமே.." ஏன் அதை முஸ்லீம் இனவாதம் என்று பத்திரிகைகளில் தலைப்பிட்டு முஸ்லீம் விரோதத்தை இன்னும் கூர்மை படுத்தவா? மீண்டும் வன்முறைகளையும் இடப்பெயர்வுகளையும் எதிர்கொள்ள பிச்சைக்காரர்களாகவேனும் நிம்மதியாக வாழும் அப்பாவிகளை பகடை காய்களாக்கவா? யாழ்ப்பாண மீள்குடியேற்றத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதற்கு வெள்ளவத்தையில் நிரம்பி வழியும் தமிழர்களே சமகால சான்று. அத்துடன் மிக அண்மைய முதூர் வெளியேற்றமும், வெளியேற்றத்தை மறைமுகமாக நிர்பந்திதமையும் (குரங்கு பாஞ்சான் உட்பட) யாழ் மீள்குடியேற்றம் இப்போது சாத்தியமானதல்ல என்று கோடிட்டு காட்டுகின்றது. மற்றும் அது தொடர்பான கருத்தாடல்கள் இரு சமூக பிரபலங்களுடன் ஏராளமாய் "எரிமலை"யில் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் முஸ்லிம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேறல் தங்களுக்கு உவப்புக்குரியதில்லை என்று பெரும்பாலான தமிழ் பிரபலங்கள் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். (அவை தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போதும் என் கணனியில் பாதி இடத்தை பிடித்திருக்கின்றன) எல்லாளன் சங்கிலியன் படைகளின் மிரட்டல்களை அறிந்துகொள்ள அக்கால முஸ்லீம் பத்திரிகைகளை பாருங்கள். எனென்றால் தமிழ் ஊடகங்கள் புலிகளுக்கு கெட்ட பெயர் உண்டாகும் எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை என்பது நீங்கள் அறியாததொன்றல்ல. (ஏன் சிங்கள இனவாதம் முஸ்லிம்களை தாக்கும் போது கூட இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்றே செய்தி வெளியிடுகின்றன!)(முஸ்லீம் சிங்கள பிரச்சினைகள் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட போதெல்லாம் சிங்கள இனவாதிகளை காத்துதவி புரிந்ததெல்லாம் அக்கால தமிழ் தலைமைகள் என்பதும் இன்னும் மறக்கமுடியாத வரலாற்று பாடம். )"விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்..." யாழ்ப்பாண மக்கள் அறிவு கொழுந்துகள் என்ற நம்பிக்கையில் மரண அடி கொடுத்த வாக்கு மூலம் இது. சாந்தி ஆசைக்காக நான் இங்கு கருத்தாடவில்லை. இரு தசாப்தத்தை நெருங்கிவிட்ட யாழ் முஸ்லிகளின் பிரச்சினையில் இன்னும் தமிழ் மக்களின் பார்வை அன்றிருந்ததை விட பெரிதாக மாறவில்லை என்ற உண்மையின் வலிக்கிறது . அவ்வளவே. இக்கால பகுதியில் எல்லா வெகுஜன ஊடகங்களிலும் சொல்லப்பட்ட முஸ்லிம்களின் நியாயம் தமிழ் மக்கள் காதுகளில் கூட போட்டுக்கொள்ளவில்லை என்று புரிகிறது அல்லவா? விடிய விடிய ராமாயணம்...அத்துடன் அதைவிட பழைய ஜூலை இன்றும் பேசப்படும்போது அக்டோபர் மறக்கப்படும் என்று எதிர் பார்ப்பது எங்ஙனம் இயலும்? விடுதலை இயக்கங்களில் முக்கிய புள்ளிகளாக இருந்த முஸ்லீம் கள் பிற இயக்கத்தவர்களால் மட்டுமல்ல அதே இயக்கத்தவர்களால் கொல்லப்பட்ட உண்மை மறக்கடிக்க பட்டுவிட்டதா? இதேவேளை முஸ்லிம்களின் வலியை புரிந்த எல்லா தமிழர்களுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும். முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது "தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்!" நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

2 comments:

Jude said...

I Agree!!! உங்கள் வேதனை எனக்கு புரிகின்றது! வெட்கபடுகிறேன்! (As long as variety of races live this problem will be there because no one is using their 6th sense thus humanity!!!)

அதிரை தாருத் தவ்ஹீத் said...

இதையும் படித்துப் பாருங்கள்:
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1083&Itemid=167