Tuesday, October 28, 2008

இந்த கருத்துக்களுக்கு யாரவது அறிவார்ந்த பதில் அளித்தால் நல்லது. அறிவுமதி சொன்னது எல்லாம் அறிவார்ந்த பதில் ஆகுமா? கேள்விக்குத்தான் பதில்! (லியோனி பட்டிமன்றம் அரட்டை அரங்கம் பார்பவர்கட்குதான் புரியவில்லை. தமிழ் சங்க விவாத மேடை கண்டவர்கட்குமா புரியவில்லை?) கருத்தை திருப்பி சொல்வது பதில் ஆகுமா?

குமுதத்தில் ஞானி சொன்னது

ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து, மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் ஷேவ் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு, ஏ.சி. காரில்தான் வந்து இறங்குகிறார்கள். மேற்கே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் உலவும் ஏடுகளில், பூசம், கார்த்திகை முதலிய சைவச் சடங்குகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், தீபாவளிக்கு புது டிஸைன் நகை, பட்டு வகைகள், வாஸ்து, ஜோதிட விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளில் குண்டு வீச்சு செய்திகளை விட அதிகமாக `டாக்சி டாக்சி'தான் ஒலிக்கிறது. எட்டு மணி நேரம் கியூவில் நின்று 15 ஆயிரம் இலங்கைப் பணம் கொடுத்து ஒரு தமிழ்ப்படத்தை அண்மையில் பார்த்தேன் என்று ஒரு இலங்கைத் தமிழர் வலைப்பூவில் எழுதியதைப் படிக்கும்போது, குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது எழும் வேதனைக்கு நிகரான வேதனை எனக்கு உண்டாகிறது. அவர்களுக்காக அனுதாபப்படும் யாரும் எங்கேயும் தங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொள்வதே இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலையில் மேலும் மேலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைப்பது அர்த்தமற்றது. சிந்திக்க வைப்பதுதான் தேவை. பகுத்தறிவு ஒன்றுதான் தீர்வு.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய காந்தி, ஒருபோதும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பை நம் மனங்களில் விதைக்கவில்லை. அதனால்தான் இன்று ஆங்கிலத்தைப் பயன்படுத்தி நம்மவர்களால் உலகம் முழுதும் வெற்றி அடைய முடிகிறது. வெறுமே உணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன், தமிழச்சிகள் அங்கே கற்பழிக்கப்படுகிறார்களே என்று இங்கே பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய நடிகனெல்லாம், மேடையில் குமுறுவதைக் கேட்க அருவருப்பாக இருக்கிறது..அனுதாபக் குரல்களை எழுப்பியவர்கள் எல்லாரும் குறைந்தபட்சம் ஒருசில மணி நேரங்களில், அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் அல்லது மாதங்களில் அவரவர் சுகதுக்கங்களுக்குப் போய்விடுவார்கள்

No comments: